பயிர் பாதுகாப்பு :: எலந்தப்பழப் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல்நோய்: ஒய்டியம் எர்சிபோய்ட்ஸ் எஃப் ஸ்பீசியஸ் ஜிசிபி

அறிகுறிகள்:

  • உருவாகும் இளம் இலைகளில் வெள்ளை நிற துகள் போன்று தென்படும் இதனால் இலைகள் சுருங்கி, உதிர்ந்துவிடும்.
  • இளம் பழங்களின் மேல் சிறியதாக வெள்ளை நிற துகள் போன்று வளர ஆரம்பிக்கும், பின் அந்தத் துகள்கள் ஒன்று சேர்ந்து கடைசியில் பழுப்பு நிறத்தில் இருந்து  ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • தீவிரமான நிலையில் முழு பழங்களையுமே இந்தத் துகள்கள் மூடிவிடும்.
  • பாதிக்கப்பட்ட இளம் பழங்கள் முதிர்ச்சியடையும் முன்பே உதிர்ந்துவிடும் அல்லது கெட்டியாகவும், வெடிப்புற்றும், வடிவம் இல்லாமலும், நன்கு வளர்ச்சி இல்லாமலும் காணப்படும்.
  • முதிர்ந்த பழங்களின் மேல் துறுப்பிடித்தது  போன்று தென்படும். சில சமயங்களில் முழு பயிருமே சந்தைப்படுத்தலுக்கு உகந்தது இல்லாமல் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • நவம்பர் முதல் மற்றும் மூன்றாம் வாரத்தில் 0.5% டைனோகேப் 0.25% ஈரமான கந்தகத்தை தெளிக்கவும், அல்லது பழங்கள் பட்டாணியின் அளவு வளர்ந்தவுடன் தெளிக்க வேண்டும்.
  • ட்ரைட்டன்-ஏ.ஈ(அ) டீபால்(அ) சேன்டோவிட்டை ஒட்டுதலுக்காக பயன்படுத்தப்படுகிறது.



அறிகுறிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015